மணல் ஒப்பந்ததாரர் இல்லத்தில் 2-வது நாளாக நீடித்த வருமான வரித்துறை சோதனை


கோவை, நவம்பர் 10 

கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஒ. ஆறுமுகசாமி, தொழிலதிபர் சஞ்சீவன் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது. 

சென்னை, கோவை, தஞ்சை மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கோவையில் மட்டும் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில், மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் பந்தயச்சாலை பகுதியில் உள்ள வீடு, அவினாசி சாலை மற்றும் ராம்நகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல, நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சஞ்சீவனுக்கு சொந்தமான போத்தனூர் பகுதியில் உள்ள நீலகிரி ஃபர்னிச்சர் கடை, வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தொடங்கிய இந்தச் சோதனை, இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...