ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைப்பு

நவம்பர் 10

ஜவுளி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், அன்றாடம் பயன்படுத்தக் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 28 சதவீதம் ஜிஎஸ்டி கொண்ட பொருட்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவும், ஷாம்பூ, பிளாஸ்டிக் பொருட்கள், சுகாதார பொருட்கள், சூட்கேஸ், காகிதம், எழுது பொருட்கள், கடிகாரம், இசைக் கருவிகள் உள்ளிட்டவைகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவின் கீழ் உள்ளன. 

இருப்பினும், பெயிண்ட்கள், சிமெண்ட் ஆகியவை 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. வாஷிங் மேஷின், ஏசி போன்ற சொகுசு பொருட்களும் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...