இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு

நவம்பர் 10

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னணி ஆல்ரவுண்டர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பிடிக்காமல் இருந்த அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். மற்றபடி இந்திய டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு : 

1. விராட் கோலி (கேப்டன்), 2. லோகேஷ் ராகுல், 3. முரளி விஜய், 4. தவான், 5. புஜாரா, 6. ரகானே, 7. ரோகித் சர்மா, 8. சகா (விக்கெட் கீப்பர்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. குல்தீப் யாதவ், 12. மொகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. புவனேஸ்வர் குமார், 15. இசாந்த் ஷர்மா.

இதனிடையே, முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில், சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நாளை (நவம்.,11) தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் அணி வருமாறு:-

சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக்குப்தா, ஆகாஷ் பண்டாரி, அவேஷ்கான், சக்சேனா, ஜிவான்ஜித்சிங், ரவிகிரண், ரோகன் பிரேம், சந்தீப், தமய் அகர்வால், சந்தீப் வாரியா, அமோல் பிரீத்சிங்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...