சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ. 1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

கோவை, நவம்பர் 11: பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் நடைபெற்ற வருமான வரிசோதனையில் சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். இன்று 3 வது நாளாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மன்னார்குடி சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்களாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின் போது, கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர். தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 நாள் சோதனையில் மொத்தம் ரூ. 5.5 கோடி ரொக்கப் பணம், 15 கிலோதங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. பெயரளவிலான சில போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வருமான வரி சோதனை நீடிப்பதால் சசிகலா உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சோதனை நீடிப்பதால் அனைவரும் 3-வது நாளாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...