புதுப்பொலிவுடன் வெளியாகியுள்ள மாநகராட்சி வலைதளம்

கோவை, நவம்பர் 12

கோவை மாநகராட்சி தொடர்பான பல்வேறு செய்திகள், தகவல்கள் மற்றும் இ-சேவை வசதிகள் அடங்கியுள்ள மாநகராட்சி வலைதளம், கூடுதல் தகவல்களோடு புதுப்பிக்கப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்படுள்ளது.



புதிதாக வெளியாகியுள்ள இந்த வலைதளத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், வானிலை நிலவரம்,  புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள், மாநகராட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள், வாட்ஸ் ஆப் மற்றும் குறுந்தகவல் மூலமாக புகார் தெரிவிக்கும் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.



மாநகராட்சிக்குட்பட்ட வரித்துறை, பொறியியல், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், நகரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டம், குப்பை மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும், அதில் பணிபுரியும் முக்கிய அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய அரசின் சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்வச் பாரத், ஸ்வச்சத்தா போன்ற பல்வேறு திட்டங்களின் வலைதளங்கள் மற்றும் செயலிகளை எளிதாக தொடர்புகொள்வதற்கான வசதிகளும் இந்த  வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.



மேலும், கோவை மாநகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தளங்கள், கோவில்கள், பேருந்து வசதிகள், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நேரம் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

'இந்த வலைதளத்தை உபயோகித்து, அரசின் பல்வேறு இ-சேவைகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். மேலும், மாநகராட்சி நிர்வாகம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக செயலின் மூலமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதோடு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரிந்துகொள்ளலாம். இதனால், பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே உள்ள தூரம் வெகுவாக குறையும்' என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...