ஜெயா டிவி மற்றும் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் 5-வது நாளாக நீடிக்கும் சோதனை

நவம்பர் 13:

சசிகலாவின் குடும்பத்தினர் விவேக் கிருஷ்ணபிரியா வீடுகள் மற்றும் ஜெயா டிவி அலுவலகத்தில் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது, 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

வருமான வரித்துறை ஆபரஷேன் கிளீன் மணி என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் உள்ள சசிகலாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9 ஆம் தேதி சோதனையை தொடங்கினர்.

இந்த வருமான வரித்துறை சோதனை 5-வது நாளாக இன்றும் சில இடங்களில் நீடித்து வருகிறது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விவேக் வீடு மற்றும் ஜெயாடிவி அலுவலகத்திலும் இன்று சோதனை நடந்து வருகிறது. அதேபோல், கொடநாடு கர்சன் டீ எஸ்டேட், காஞ்சிபுரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நீடித்து வருகிறது. கடந்த 9 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு துவங்கிய வருமான வரித்துறை சோதனை 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...