கல்வியாளர் சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது


கோவை, நவம்பர் 13

தொழில்முறை கல்வியாளர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் என பல்வேறு துறையில் சாதனை படைத்து வரும் திரு. சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது வழங்கப்பட்டது.



புதுதில்லியில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் எட்டு நாடுகளிலிருந்து சர்வதேச புத்தகங்களின் தலைமைப் பதிப்பாளர்கள் பங்கேற்று அவருக்கு விருதினை வழங்கி கவுரவித்தனர். மேலும், சிறந்த உலக சாதனை யூனியன் புத்தகத்தில் 2018 ஆண்டின் பதிப்பில் இந்த வருட இந்தியர்கள் பிரிவில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன் 1978-ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின் முதன்மை ஆராய்ச்சித் திட்டத்தில் முதன்மை ஆராய்ச்சியாளர், கற்றல் நிபுணராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது, இந்திய அரசின் தரக் கவுன்சில் உறுப்பினரான அவர் கோவையில் உள்ள இந்திய ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...