கோவையில் கியாஸ் கசிவால் தீவிபத்து : வீட்டு உபயோகப்பொருட்கள் முற்றிலுமாக கருகின

கோவை, நவம்பர் 13 

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளன. 5 குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். 

இந்த வீடுகளுள் ஒன்றில் வசிப்பவர் சுகுணா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று வழக்கம் போல் வீட்டு சமையல் வேலைகளை முடித்துவிட்டு சுகுணாவும் அவரது கணவரும் பணிக்கு புறப்பட்டனர்.  குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். 

மதியம் 1 மணியளவில் வீட்டில் இருந்து கரும்புகை கசியத்தொடங்கியது.  தொடர்ந்து, வீட்டின் கூரையில் தீப்பிடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. 

இது தொடர்பாக, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 5 பேர் கொண்ட தீயணைப்பு படைக்குழுவினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 



சுமார் இருபது நிமிட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, மெத்தை மற்றும் சமையல் பாத்திரங்கள் முற்றிலுமாக எரிந்தன. 

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அருகே தனியாருக்குச்சொந்தமான மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. 

தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிற்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...