புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: புதுவை முதலமைச்சர் பேட்டி

கோவை, நவம்பர் 13

மாநில அரசுகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என கோவை விமான நிலையத்தில் புதுவை மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை முதலமைச்சர் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு அதிக அளவில் இருப்பதால் பாதிக்கப்பட்டது புதுவை மாநிலம். மாநில அரசின் செயல்பாட்டினை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு, துணை நிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது. புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மக்கள் நலத் திட்டங்களில் அரசு உறுதியாக இருக்கும் நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்குத் தடை விதித்து வருகிறார்.



மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி ஏற்படவில்லை, பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு சோதனை மேற்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது.

மத்திய அரசிற்குப் பணியாத நபர்களை, வியாபாரிகளைப் பணியவைக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ-க்கள் பதவிப் பிரமாணம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம்தான் கேட்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி வரியால் 30 சதவிகித வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை 12 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...