அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் தொல்லை- மாணவர் புகார்

கோவை, நவம்பர் 14

அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் செயலில் ஈடுபட்டு வரும் சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இதில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த வெள்ளைய திருப்பதி என்ற மாணவர் தங்கி கோவைபுதூரில் செயல்பட்டு வரும் சிபிஎம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுதியில் சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்துவருவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தன்னை ராகிங் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கித் தர வற்புறுத்துகின்றனர். மேலும், அவர்களின் துணிகளை துவைக்கச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர். விடுதியில் பாதுகாவலர் இல்லாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. 

தருமபுரி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் கனவுகளோடு வந்த தன்னை படிக்க விடாமல் தொடந்து துன்புறுத்துகின்றனர். விடுதியில் மாணவர் அல்லாத நபர்களும் தங்கி உள்ளனர். தற்போது அளித்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் விடுதிக்குச் செல்ல அச்சமாக உள்ளது."

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...