நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி, தமிழக ஆளுநரிடம் மனு

கோவை, நவம்பர் 15: நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.

இம்மனுவில், நீர்நிலைகள் மற்றும் அதன் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வருங்காலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் அவற்றை கண்காணிப்பது , ஏரி மற்றும் குளங்கள் போன்றவற்றில் வாழும் உயிரினங்களை பாதிக்காதவாறு அவற்றை பராமரித்தல், பொதுப்பணி துறைக்கு சரியான நிதியை ஒதுக்குவது மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயம்புத்தூர் தடுப்பணையை மீட்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் திரு. இரா. மணிகண்டன் தெரிவித்தார்.

மேலும், இந்த கோரிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என கவர்னர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...