கோவை மாநகராட்சியில் சுகாதார அலுவலர் உண்ணாவிரத போராட்டம்

கோவை, நவம்பர் 15: சுகாதார அலுவலருக்கு உண்டான சம்பளம், அலுவலகம், களப்பணி செய்ய வாகனங்கள் கொடுக்காமல் மெத்தனமாக செயல்படும் கோவை மாநகராட்சியை கண்டித்து, நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சுகாதார அலுவலர் தொடங்கினர்.

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரியும் பிச்சைமணி, சிவநேசன், அருணகிரி, ராமச்சந்திரன், திருமால், உள்ளிட்டவர்களுக்கு சுகாதார அலுவலராக அரசு ஆணை எண் 182 ன் படி பதவி உயர்வு வழங்கப்பட்டது.

உத்தரவு வழங்கப்பட்டும் இதுநாள் வரை சமபள உயர்வு, அலுவலகம், மற்றும் பணி இடம் வழங்கப்படவில்லை.

மேலும் களபணி செய்ய வாகன வசதிகள் செய்து தராமல், அமைச்சரின் உறவினரை காரணம் காட்டி இளையோர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டு அடிமைகள் போல் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஆட்சிப்பணி உறுதி மொழிக்கு எதிராகவும், தமிழ்நாடு மாநில லீகல் சர்வீஸ் அதராட்டி ஆணையை மதிக்காமல் செயல்படும் மாநகராட்சி ஆணையரை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பிச்சை மணி இருந்து வருகிறார். 

மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இருந்தும், உள்ளாட்சி நகராட்சித்துறை அமைச்சரை ஆணையர் சந்திக்கச்சொல்வதை கண்டித்தும் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...