கோவை என்னை வளர்த்த ஊர் - புதிய காவல் ஆணையர் நெகிழ்ச்சி பேட்டி

கோவை, நவம்பர் 18: கோவை மாநகரின் 27-வது காவல் ஆணையராக K.பெரியய்யா பதவியேற்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த K.பெரிய்யா கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 

அப்போது, கல்லூரியின் ஹாக்கி அணியின் கேப்டனாக பதவி வகித்தார். அதோடு, கோவை மாவட்ட கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 1989-ம் ஆண்டு காவல் துறையில் டி.எஸ்.பி. ஆக பணிக்குச் சேர்ந்த அவர் 1997-ல் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், சென்னை பெருநகர கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணி புரிந்து வந்தார்.

அவர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் கோவையை நன்கு அறிந்தவன். கல்லூரிப் படிப்பை இங்கு தான் முடித்துள்ளேன். கோவை என்னை வளர்த்தெடுத்த ஊர். இந்த ஊரின் அமைதிக்கு பல்வேறு திட்டங்களை வகுப்பேன்.



மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

காவல்துறையின் நற்செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...