ப்ரூக்பீல்ட்ஸில் கர்நாடக இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் 127 -வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை, நவம்பர் 21

கர்நாடக இசையில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் 127-வது பிறந்தநாள் கொண்டாட்டம், வரும் 26-ம் தேதி கோவை ப்ரூக்பீல்ட்ஸில் நடைபெறுகிறது. 

கர்நாடக இசையில் பல ராகங்களில் 2,500-க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசைக்கலைஞர் பாபநாசம் சிவன் ஆவார். இவரது, 127-வது பிறந்த நாள் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ப்ரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் சிறப்புக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வளரும் கலைஞர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. 

இந்த நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் மகள் கலைமாமனி ருக்மினி ரமணி மற்றும் பேரன் சங்கீத கலாசாரதி பாபநாசம் அசோக் ரமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இறுதியில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை இவர்களின் சிறப்பு நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...