கடன் வாங்கியவரை வீட்டினுள் வைத்து பூட்டிய கந்துவட்டிக்காரர்

கோவை, நவம்பர் 22

கோவையில் கடன் வாங்கியவரை, வீட்டினுள் வைத்து கந்துவட்டிக்காரர் பூட்டி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ஒண்டிப்புதூர் அருகிலுள்ள கம்பன் நகரில் மோகன் - வாணி தம்பதியினர், கடந்த 11 வருடங்களாக சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, சோமனூர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இதனிடையே, இன்று இவர்களது வீட்டுக்கு வந்த ஆறுச்சாமி, வீட்டிற்குள் உரிமையாளர் மோகனை வைத்து பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் பள்ளிக்கு சென்று திரும்பிய மகள் தெருவில் நிற்க நேர்ந்தது. 



இது குறித்து தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ஆறுச்சாமியை அழைத்து வந்து வீட்டை திறந்து விட்டனர். வாங்கிய கடனை விட அதிக மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயல்வதாக மோகன் குற்றம்சாட்டினார். அப்போது, வீட்டை கடந்தாண்டு மோகன் பத்திரப்பதிவு செய்து வைத்தாகக் கூறி, அதற்கான பத்திரங்களை ஆறுச்சாமி போலீசாரிடம் காண்பித்தார். வீட்டை தனக்கு விற்றுவிட்டு காலி செய்யாமலும், பணத்தை திரும்பத் தராமலும் அலைகழித்த ஆத்திரத்தில் வீட்டை பூட்டிச் சென்றதாகவும் கூறினார். 

சொத்துக்கள் குறித்த பிரச்சனை என்றால் நீதிமன்றத்தில் இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினர், ஆறுச்சாமி வீட்டிற்குள் வைத்து கதவை மூடிச்சென்றது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...