நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ உண்மை என தில்லி தடயவியல் ஆய்வகம் உறுதி

நவம்பர் 23

திரைப்பட நடிகை ரஞ்சிதா உடன் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா உல்லாசமாக இருப்பது போல் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீடியோ உண்மையானது என தில்லி தடயவியல் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு பிடதியில் உள்ள ஆசிரமத்தில் திரைப்பட நடிகையான ரஞ்சிதா சாமியார் நித்தியானந்தா உடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் அவரது கார் டிரைவர் லெனின் கருப்பன் மூலம் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, நித்தியானந்தா தலைமறைவானார்.

அவருக்குச் சொந்தமான பெங்களூரு, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரமங்கள் முன் மக்கள் போராட்டம் நடத்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதற்கிடையில், திருவண்ணாமலை அருகே நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு ஆண்மையே இல்லை. வீடியோவில் இருப்பது தான் இல்லை. அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என நித்தியானந்தா வாதாடினார். பின், ஆண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய சிடி-யை தில்லியிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிஐடி-க்கு தடயவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தா தான் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...