கோவையில் தொழில் முனைவோரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி

கோவை, நவம்பர் 23

கோவை, பீளமேடு பகுதியில் தொழில் முனைவோர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உஜில் சந்திரன். இண்டீரியர் டெக்ரேசன் செய்வதற்கான உபகரணங்கள், இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உபகரணங்கள் வாங்க 4 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் பொருட்களை கொடுக்காமல் சந்திரன் காலதாமதம் செய்து வந்த நிலையில், சிவக்குமார் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இந்நிலையில் கோவை வந்த சிவக்குமாரை தனியாக அழைத்துச் சென்ற சந்திரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் காயமடைந்த சிவக்குமார் அவரிடம் இருந்து தப்பி வந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...