தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு

நவம்பர் 23

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகை செய்யும் சட்ட வரைவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர், தமிழக சட்டசபையில் இதற்காகச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை முழுவதுமாக நீங்கியது. 

இதேபோல, புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அது எதிர்ப்பின்றி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இனி, இந்தச் சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் சட்ட வடிவம் பெறும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...