நண்பனை கொலை செய்த கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

நவம்பர் 23

நண்பனைக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோடு, மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு இ.சி.இ பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கல்லூரிப் படிப்பிற்காக, காளப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் நீலகிரி மாவட்டம் எல்லநள்ளிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்கியிருந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ம் தேதி அறையைச் சுத்தம் செய்வதில் சந்தோஷ், தினேஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், சந்தோஷ் கத்தியால் குத்தியதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்ட பிரதீப் தினேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  நீதிபதி குணசேகரன், குற்றவாளி சந்தோஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...