சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டு

நவம்பர் 23

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலைச்சின்னம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அணியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில், 12 எம்எல்ஏக்கள் இருந்த போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது, சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. ஆனால், இப்போது அந்த தீர்ப்பை பின்பற்றியுள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்பது இந்திய மககள் அனைவருக்கும் தெரியும். 

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர். சாதிக் அலி வழக்கு, அதிமுகவிற்கு பொருந்தாது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேர்தல் ஆணையம், மத்திய அரசின் விருப்பத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது நிருபணமாகி உள்ளது. 

இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளது. 99 சதவீத தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது, இரட்டை இலை சின்னம், குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக உள்ளது. அதை மீட்போம். தேர்தல் ஆணையம் தீர்ப்பு மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது நிருபணமாகி உள்ளது. அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆர்கே நகர் தேர்தலில் நான் தான் மீண்டும் போட்டியிடுவேன். வெற்றி பெற்று, இரட்டை இலையை மீட்பேன். தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல உள்ளது. இவ்வாறு தினகரன் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...