பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், நவம்பர்  24

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வகித்தனர். 

இதில்,  அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும், 6வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு 7வது ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டும், கடந்த 2004 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே.31ம் தேதி வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்,தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒளிவு மறைவற்ற முறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிர்வாக மாறுதலை உடனடியாக நிறுத்த வேண்டும், 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிறைவாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...