கோவை அருகே பயணிகள் ஆட்டோ விபத்துக்குள்ளாகி பள்ளி மாணவர்கள் ஆசிரியை காயம்

கோவை, நவம்பர் 24

கோவை அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை காயமடைந்தனர்.



கோவை மாவட்டம் தென்னம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர் மினி பஸ் மற்றும் பயணிகள் ஆட்டோவைவையே நம்பி உள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சங்கோதிபாளையம் சமத்துவபுரத்தில் இருந்து பயணிகள் ஆட்டோவில் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என 12 க்கும் மேற்பட்டோர் அரசூர் ஆரம்ப பள்ளிக்கு பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அரசூர் மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் அதே பள்ளியை சார்ந்த ஆசிரியை ஒருவர் காயமடைந்தனர். 

இதனை தொடர்ந்து அவர்களை மீட்ட பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு 3 மாணவர்களையும் ஆசிரியரையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் ஆட்டோக்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

இதனை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதுவே இன்று ஏற்பட்ட விபத்திற்கு காரணம் என்றும், அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு பேருந்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...