சின்னம் முக்கியம் இல்லை, வேட்பாளர்தான் முக்கியம்- கோவையில் டி.டி.வி தினகரன் பேட்டி

கோவை, நவம்பர் 24

அதிமுக-வின் அடையாளமாகக் கருதப்படும் இரட்டை இலை சின்னத்தினை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதையடுத்து சின்னம் முக்கியமில்லை எனவும், வேட்பாளர்தான் முக்கியம் என்றும் அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார்.



இன்று கோவை வந்த டி.டி.வி. தினகரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை சுயேட்சையாகத் தான் போட்டியிட்டோம். அப்போதே எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, இரட்டை இலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். முதலமைச்சரால் தொடரப்பட்டுள்ள கேவியட் மனு சாதாரண நடைமுறை தான். அதிமுக மற்றும் சின்னம் ஒரு பொருளாக மாறிவிட்டது.

தேர்தல்களைப் பொறுத்தவரையில் வேட்பாளர் யார் என்பது தான் முக்கியம். சின்னம் பிறகு தான். தற்போது எங்கள் அணியின் சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். ஆர்.கே.நகர் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரியும்.

மதுசூதனன் எந்த அடிப்படையில் 'ஏ' மற்றும் 'பி' ஃபார்ம்-ஐ நிரப்புவார் எனத் தெரியவில்லை. மைத்ரேயன் கருத்தைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை. இன்னும் ஒரு மாதத்தில் யாருக்கு டெபாசிட் என்பது தெரியும். வாக்கு வங்கி என்பது கட்சிக்குத் தான். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலை பொருத்தவரை இரண்டும் துரோகிகள் கையில் சென்றுள்ளதால் மக்கள் சரியான முடிவெடுப்பார்கள். ஆட்சி மட்டும் இல்லாவிட்டால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள்.

இந்தத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வரும் 27 முதல் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒரு நாளில் தாக்கல் செய்யப்படும். அந்தத் தொகுதி அதிமுக-வின் கோட்டை. எனவே அதிமுக வெற்றி பெறும். அவர்களுக்கு வாக்கு வங்கியே கிடையாது" என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...