ஆனமலை காடுகளுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரம் கஞ்சா செடிகளை அழித்தது வனத்துறை

கோவை, நவம்பர் 26

ஆனமலை காடுகளுக்குள் பயிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கோவை மாவட்ட வனத்துறையினர் அழித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனமலைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று ஆனமலை வனப்பகுதிக்குள் 120 பேர் கொண்ட வனதுறை குழு ரோந்து சென்றது.



அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 6 மணி நேரம் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடத்தை தேடியதில், ஒரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து, அங்கு இருந்த கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டியும் தீயிட்டும் அழித்தனர்.



கஞ்சா பயிரிட்டது யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...