ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருப்பூர், நவம்பர் 28

திருப்பூர், பாளையக்காடு சூர்யா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (49). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாராக்காள் (50) என்பவரிடம் இருந்து அந்த பகுதியில் உள்ள 10 1/2செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 

அதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பனமாக மொத்தம் மாராக்காளிடம் ரூ.13 லட்சத்தை செந்தில்நாதன் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் மாராக்காள் அந்த நிலத்துக்கான பவர் வாங்கி விட்டு அதன்பிறகு செந்தில்நாதனுக்கு தெரியாமல் பவரை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் செந்தில்நாதன், மாராக்காளிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால், மாராக்காள் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். 

இதையடுத்து மாராக்காள் மற்றும் அவருடைய மகன்களாக செல்வராஜ் (36), பழனிசாமி(35) ஆகியோர் சேர்ந்து செந்தில்நாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் மாராக்காள் மற்றும் அவரது இரு மகன்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்வராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...