இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் டிச.,1-ம் தேதி ‘உயர் கல்வியில் மாற்றம்’ மாநாடு

நவம்பர் 27

இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாம் பதிப்பாக தேசிய உயர்கல்வி மாநாடு, வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கிறது. உயர்கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.

இது குறித்து, மாநாட்டின் தலைவர் நந்தினி ரங்கசாமி, துணைத்தலைவர் மலர் விழி ஆகியோர் கூறியதாவது: இந்தியாவில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் என 48,000 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், இவற்றில் பல உலக அளவில் தரநிர்ணயத்தில் மிகவும் பின்தங்கியவைகளாக உள்ளன. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வியில் மாபெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு, தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மை, தர உறுதி, தன்னாட்சி, அங்கீகாரம், தொழில்-கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் தேவையாக உள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பு, தற்போதுள்ள உண்மை நிலவரம், திறன் தேவை, தொழிற்சாலைக்கு ஏற்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு, புதுமையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உயர்த்தப் பாடுபட்டு வருகிறது. இது குறித்த பல்வேறு பரிசீலனைகளை பங்குதாரர்கள், நிபுணத்துவம், கொண்ட பலரது ஆலோசனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணங்களை அரசிடம் கடந்த ஆண்டு ஒப்படைத்துள்ளது.

 

உயர்கல்வியின் நோக்கமே புதுமைகளை மேம்படுத்தி, தொழில்முனைவோரை மாணவர்களிடையே உருவாக்கி, நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இதுவே வெளிநாட்டினருக்கு நமது சேவை சென்றடையக் காரணியாக இருக்கும். இதன் அடிப்படையாகக் கொண்டு, அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் இந்த மாநாட்டில் பேச உள்ளனர். தமிழ்நாடு உயர்க்கல்வி முதன்மை செயலர் திரு.சுனில் பலிவால் மாநாட்டைத் துவக்கி வைக்க இசைந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். 

பள்ளிக் கல்வி மாநாடு : 

இதேபோல, இந்திய தொழில் கூட்டமைப்பு,  பள்ளிக் கல்வி மாநாடு டிசம்பர் 2-ம் தேதி நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள், தமிழ்ப் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள், மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ செங்கோட்டையன், தமிழ்நாடு பள்ளி கல்வி்ததுறை முதன்மை செயலர் திரு. பிரதீப் யாதவ் ஆகியோரிடம் அளிக்கப்படும். 

21-ம் நூற்றாண்டில் பள்ளியில் தலைமைப்பண்பு கல்வி குறித்து இதில் பேசப்படும். இந்த மாநாட்டில், மத்திய கல்வி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் ஜி பாலசுப்ரமணியன், கரடி டேல்ஸ்/கரடி பாத் திரு. சிபிவிஸ்வநாத், இஎல்டி கன்சல்டன்ட் ஜோதி ஸ்வருப், ஒன்ஸ்டெப் சிஇஓ மற்றும் நிறுவனர் ஷிவ் தேவன், விப்கியார் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் வினேஷ் மேனன், நெக்ஸ்ட் கல்வி தலைவர் ஆர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...