எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் இருந்த ஓ.பி.எஸ். பெயரை கிழித்த மர்ம நபர்கள்

கோவை, நவம்பர் 28

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் இருந்த ஓ.பி.எஸ். பெயரை மர்ம நபர்கள் கிழித்துச் சென்றனர்..



கோவையில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக கோவையில் நடைபெற்று வருகின்றன.. 

விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகிலும் வரவேற்பு பேனரை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர். 

அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த சூழலில், இன்று மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றுள்ளனர். 

அ.தி.மு.க.வின் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கிடையே பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...