ரகுவின் மரணம்: எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது, என்கிறார் முதலமைச்சர்

கோவை ரகு உயிரிழப்பு வேதனைக்குரியது. பேனரால் உயிரிழப்பு நடக்கவில்லை என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருந்தினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,அதிமுகவின் கோட்டையான ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் 6ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறேன். ஒரு இயக்கம் ஒன்றாக இணையும் போது காலக்கெடு நிர்ணயிப்பது சரியாகாது. அணிகள் இணைந்தால் விலகிவிடுவதாக கூறியவர் (தினகரன்), தற்போது என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவர். 

மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை சீரமைக்கவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் தங்கமணி, உதயக்குமார், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தில் புயலின் காரணமாக 3,750 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதை சீரமைக்க 2,000 மின்சாரத்துறை அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் நிவாரணப் பணிகளை பெறக் கட்டுப்பாட்டு அறையும், தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடலுக்கு 29 படகில் சென்ற மீனவர்களில் 18 படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பி விட்டனர். 11 படகில் சென்ற 30 மீனவர்களைக் காப்பாற்ற கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேமிக்க 3 ஆண்டுகால திட்டத்தில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு,  இந்தாண்டு ரூ. 350 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.  இதைத்தவிர, குடிபராமத்து பணிகள் மூலமாகவும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட பாலம் இடிந்தது தொடர்பாக விசாரிக்கப்படும். அதிமுக சார்பில் மாதத்தில் அதிக அளவில் கூட்டங்கள் நடத்தப்படுவது, எதிர்க்கட்சிகளால் குறிப்பாக திமுகவால் தாங்க முடியவில்லை. மேலும், அதிமுக அரசு மீது குற்றம் சொல்ல முடியவில்லை என்பதால் ஸ்டாலின் விரக்தியில் பேசி வருகிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...