பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகளின் மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி அஞ்சலி

கோவை, டிசம்பர் 2

பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யா உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவையொட்டி, இரு தினங்களுக்கு முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். 

இந்த நிலையில், கனிமொழி எம்பி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். பின்னர், ஜிவி ரெசிடென்சியில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு மறைந்த டாக்டர். வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பொங்கலூர் பழனிச்சாமி, வித்யாவின் கணவரும், மருத்துவ அணி துணை அமைப்பாளருமான டாக்டர் கோகுல், மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி ஆகியோரிடத்தில் ஆறுதல் கூறினார். 

இந்த நிகழ்வின்போது, மாநகர வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...