ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : போட்டிக்களத்தில் 59 பேர்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலர் வேலுச்சாமி இன்று வெளியிட்டார். அதில், அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர் TTV தினகரனும்  உள்ளார் ஆனால் நடிகர் விஷாலுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அதிமுக, திமுக, பாஜக., நம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 131 பேர் 145 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, அவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகத் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும், நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 73 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் எப்படி பரிசீலனை நடந்தது என்ற விளக்கத்தையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டார். இதனால், நடிகர் விஷால் கடும் அதிர்ச்சி அடைந்தார். விஷாலுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தன. இதனால் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 145 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனையின் போது 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை நேரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று 14 சுயேட்சைகள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 59 பேர் இடம் பெற்றுள்ளனர். எனத் தெரிவித்தார். 

இதன்மூலம், நடிகர் விஷாலுக்கு ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...