வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நீலகிரி போலீஸார்

டிசம்பர் 09

நீலகிரி மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். 

குன்னூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.முரளிரம்பாவின் உத்தரவின் பேரில், குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் அறிவுறுத்தலின்படி, குன்னூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர். 

இந்த விழிப்புணர்வின் போது, இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அதிவேகமாகப் பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

இந்த விழிப்புணர்வின் போது உடன் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ரகுவரன், திரு. ஜான் மற்றும் திரு. ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...