கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கோவை, டிசம்பர் 10 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார். 

ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிகிடந்தது. 

இந்த நிலையில் அந்த நபர்  மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை மீட்டு பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் விசாரித்த போது தனது பெயர் செல்வகுமார் என்றும், காந்திபுரம் பகுதியில் சிலர் அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றதாகவும், இது தொடர்பாக போலீசார் புகார் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். 

தற்போது அவரை காவல் நிலையத்தில் வைத்துள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...