ஹெச். ராஜாவைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

கோவை, டிசம்பர் 15

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஹெச். ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர். 

காந்திபுரம், திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, தமிழகத்தை விட்டே காவி கும்பலை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். மேலும், தரக்குறைவாகப் பேசிய ஹெச். ராஜாவிற்குக் கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர்,  அவரை திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். 

போராட்டத்தின் நடுவே, ஹெச். ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர்,  உருவபொம்மையை போலீஸார் பிடுங்கிச் சென்றனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பெண் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...