2 நாட்கள் நடக்கும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கான கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை, டிசம்பர் 15

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இருநாட்கள் நடைபெறும் ”எம்எஸ்எம்இ (MSME) - 2017”  கண்காட்சி இன்று தொடங்கியது. 

எம்எஸ்எம்இ எனப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை சிட்கோ இன்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ”எம்எஸ்எம்இ 2017” என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 80-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் மத்திய கயிறு வாரியத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், இது போன்ற கண்காட்சிகள்  சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும். என்றார். 

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...