அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்ட வடமாநிலத் திருடர்கள் கைது

கோவை, டிசம்பர் 15

கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம்-களில் ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.



கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், நாமக்கல் மற்றும் சேலத்தில் பதுங்கியிருந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தனர். 



அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மெளசம்கான், அமீன், ஜீல்பிகர், ஹரியானாவைச் சேர்ந்த அமித்குமார், சுபேர், முபாரக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டாக், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபேர் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், சேலத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...