திருச்சி சாலையில் தடுப்பு சுவரின் அகலத்தை குறைக்க முடிவு: காவல் துணை ஆணையர் சுஜித்குமார் தகவல்


கோவை, டிசம்பர் 18

திருச்சி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் (செண்டர் மீடியன்) அகலத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார். 

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து துவங்குகிறது திருச்சி சாலை. பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுவருகிறது.



அவினாசி சாலையுடன் ஒப்பிடுகையில், இந்த சாலை சற்றே குறுகலானது. இருவழிப்பாதை கொண்ட இந்த சாலையின் இருபுறங்களிலும் கட்டிடங்கள் இருப்பதால் இந்த சாலையில் பார்க்கிங் செய்வது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது.

சாலையில் பார்க்கிங் செய்யப்படும் கார்கள் மீண்டு புறப்படும் போது பின்னால் வரும் வாகனங்கள் அவ்வப்போது மோதி சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.



இந்த சாலையை இரு புறமாக பிரிக்கும் விதமாக சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் அதிக அகலமாக இருப்பதாகவும், தடுப்புச் சுவரின் அகலத்தை குறைத்தால் சாலை சற்றே விரிவாகும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில், தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

திருச்சி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் அரசு மருத்துவமனை அருகே தொடங்கி ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை நீள்கிறது. 

இந்த தடுப்புச் சுவரின் அகலம் 3.5 அடியாக உள்ளது. இந்த அகல இடைவெளியில் செயற்கை புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது.



தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்கும் போது சாலையில் சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்ற பரிந்துரைகள் வந்தன. 

அதன்படி, தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம்.

அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் 1.5 அடி அகலம் உடையது. இதே போலவே திருச்சி சாலையிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தை கோவை மாநகராட்சியுடன் இணைந்து விரைவில் செயல்படுத்த உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...