ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடித்த கோவை போலீசாருக்கு வெகுமதி வழங்கி கவுரவிக்கிறார் தமிழக டி.ஜி.பி

கோவை, டிசம்பர் 18

ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு இன்று வெகுமதி வழங்கி கவுரவிக்க உள்ளார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன்.

கடந்த 10-ம் தேதி கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் வைத்து வட மாநில வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாநகர போலீசாரின் துரித நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மாநகர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன. 

இந்த நிலையில், இன்று கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கி கவுரவிக்கிறார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன். 

இதறகாக மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உட்பட 10 போலீசார் நேற்று சென்னை சென்றனர்.

இன்று அவர்களை சந்திக்கும் டி.ஜி.பி. துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி அளிக்க உள்ளார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...