சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் கோவிலில் குவியும் மக்கள்


கோவை, டிசம்பர் 19

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சனிபகவானுக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.



கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு பிடித்தமான உலோகமான இரும்பில், ஆயிரத்து 500 கிலோ எடையில் 7.5 அடி உயரத்தில், சனிபகவானின் வாகனமான காக்கை 400 கிலோ எடையில் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை முதல் சனிபகவானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களது கரங்களால் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தனர். 

பீளமேடு, பேரூர் உள்ளிட்ட சனீஸ்வரன் கோவில்களில் பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 20 வகையான அபிஷேகங்களை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். இதைத்தவிர, பிள்ளையார், சிவன், அனுமன் உள்ளிட்ட திருக்கோவில்களிலும் பொதுமக்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...