”நதிகளை மீட்போம்” திட்டத்தை மாதிரி திட்டமாக்க ஐ.நா-வின் சுற்றுச்சூழல் இயக்கத் தலைவர் பரிந்துரை

கோவை, டிசம்பர் 19

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் தலைமையில் மேற்கொண்ட ”நதிகளை இணைப்போம்” திட்டத்தை, மாதிரி திட்டமாக்க ஐ.நா-வின் சுற்றுச்சூழல் இயக்கத் தலைவர் பரிந்துரை செய்துள்ளார். 

நதிகளை மீட்போம் விழிப்புணர்வு இயக்கம்:-

இந்தியாவில் வற்றி வரும் நிலையில் உள்ள நதிகளைக் காக்கும் முயற்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த செப்டம்பர் 3ம் தேதியன்று 'நதிகளை மீட்போம்' என்னும் இயக்கத்தை துவங்கி நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இந்த இயக்கத்திற்கு விவசாயிகள், மாணவ சமுதாயத்தினர், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், ஊடகத் துறையினர், பல்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

தீர்வுக்கான திட்டப் பரிந்துரை:-

பேரணியின் முடிவாக ஜக்கி வாசுதேவ் அக்டோபர் 3-ம் தேதியன்று பிரதமர் மோடியிடம் நதிகளை மீட்போம் திட்ட விளக்கப் பரிந்துரையை வழங்கினார். இப்பரிந்துரை விவசாயம், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரையில் வற்றிய நிலையில் உள்ள நதிகளை மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்யும் விரிவான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், மண்ணின் இயற்கை வளத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கும். மேலும், முக்கிய திட்டமாக நதிப்படுகையில் குறைந்தது 1 கிமீ தூரத்திற்கு மரங்கள் நடுதல் திட்டம் இடம்பெற்றிருந்தது. இதனால், வருடம் முழுவதும் நதிகள் வற்றாமல் ஓடுவதோடு மண் அரிப்பும் குறைக்கப்படும். மேலும், விவசாயிகளின் நிகர வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பரிந்துரையைப் பரிசீலிக்க நீதி ஆயோக் தலைமையில் செயற்குழு:-

நதிகளை மீட்போம் இயக்கத்தின் திட்ட பரிந்துரையைப் பரிசீலிக்க மத்திய அரசு ஒரு செயற்குழுவை நியமித்துள்ளது. நீதி ஆயோக் தலைமையில் இந்தச் செயற்குழு செயல்புரியும். இக்குழுவின் உறுப்பினர்களாக நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, விவசாயத் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, குடிநீர் வாரியம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட ஆறு அமைச்சரவையின் செயலாளர்கள் செயல்படவுள்ளனர்.

திறன்மிக்க வல்லுநர்கள் அடங்கிய நிர்வாகக் குழு:-

நதிகளை மீட்போம் இயக்கத்தின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஈஷா அறக்கட்டளை சமீபத்தில் ஒரு தேசிய குழுவை அறிவித்தது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித்பசையத், பயோகான் நிர்வாக இயக்குநர் திருமதி. கிரண்ம சுந்தர்ஷா, உலக வன விலங்கு நிதி அமைப்பின் தலைவர் ரவிசிங், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்க அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சஷிசேகர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகள், விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் அதிகரிப்பு, தண்ணீர் பயன்பாடு, தண்ணீர் மறுசுழற்சி உள்ளிட்டவற்றைக் குறித்து முக்கிய முடிவுகள் கலந்தாலோசிக்கப்படும். குறிப்பாக, விவசாயிகளின் நிகர வருமான அதிகரிப்பு பற்றிய திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:-

ஈஷா அறக்கட்டளையுடன் கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், அஸ்ஸாம் மற்றும் சட்டிஸ்கர் மாநில அரசாங்கங்கள் அம்மாநிலங்களின் பசுமை போர்வையை உயர்த்தவும், அம்மாநில நதிகளை புத்துஉயிரூட்டிடவும் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'நதிகளை மீட்போம்' திட்டத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்:-

இந்த நிலையில், ஜெர்மனியின் பான் நகரத்தில் இன்று (டிச.,19) உலக இயற்கை மன்றம் 2017-ன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் ஜக்கி வாசுதேவ் மற்றும் ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் எரிக் சோலேம் ஆகியோர் உலகளவில் இருக்கும் பல்வேறு சுற்றுசூழல் இயக்கங்களுக்கு நதிகளை மீட்போம் இயக்கத்தை ஒரு முன்மாதிரியாக வைத்துச் செயலாற்றுவது குறித்து உரையாற்றினர்.

இதுகுறித்து எரிக் சோலேம் கூறுகையில், உலக சுற்றுசூழல் மேம்பாட்டிற்காக ஐ.நா-வின் சுற்றுசூழல் இயக்கம் அயராது செயலாற்றி வருகிறது. இயற்கை மற்றும் காடுகளை பாதுகாத்தல், காடுகள் அழிவைத் தடுத்தல் போன்றவற்றிற்காக செயல்புரிந்து வருகிறது. நாம் இயற்கையை எவ்வாறு கையாள்கிறோமோ, அதைப் பொறுத்து நம் கால நிலையைக் கையாளும் சாத்தியம் உள்ளது. நதிகளை மீட்போம் திட்டத்தினை முன்மாதிரியாக வைத்து நாம் உலக அளவில் காடுகள் அழிவைத் தவிர்க்கவும், தரிசு நிலங்களை மீட்டு நிலவளத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு உருவாக்கவும் முடியும் என்றார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...