2ஜி வழக்கில் முறையான விசாரணை வேண்டி மத்திய அரசுக்கு சு.சுவாமி கோரிக்கை


டிசம்பர் 21

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் அனைவரும் விடுவிப்பு என்ற தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டதாக ஆ. ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் இந்த வழக்கில் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி அறிவித்தார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...