வரும் 29-ம் தேதி கோவை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

டிசம்பர் 21

தமிழக அரசியலில் விரைவில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வரும் 26-ம் தேதி முதல் ரசிகர்களை சந்திக்க உள்ளார். கோவை மாவட்ட ரசிகர்களை 29-ம் தேதி சந்தித்து பேசுகிறார். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 15 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அப்போது அவர் சந்தித்தார். விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை பிறகு சந்திப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் 2.0, காலா படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்ததால் ரசிகர்களை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது, அந்தப் படங்களை முடித்து விட்டதால் மீண்டும் ரசிகர்கள் சந்திப்புக்கு தயாராகி உள்ளார். வருகிற 26-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை 6 நாட்கள் ரசிகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

எந்தத் தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

26-ந் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். 27-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

28-ந் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 29-ந் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 30-ந் தேதி மற்றும் 31-ந் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சால்வை, மாலைகள் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தோளில் கைபோடக்கூடாது, கையைப் பிடித்து குலுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினிகாந்த் அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...