லீமெரிடியன் ஓட்டலில் ”கவுண்ட் டவுன் 2018” புத்தாண்டு கொண்டாட்டம்

கோவை, டிசம்பர் 21

கோவையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணி முதல் ”கவுண்ட் டவுன் 2018” என்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் புதிய வருடத்தை வரவேற்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அனைவரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக, கோவையில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் சித்ரா அருகே அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலான லீமெரிடியன் ஓட்டலில் இந்த ஆண்டும், ”கவுண்ட் டவுன் 2018” என்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக லீமெரிடியன் ஓட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த புத்தாண்டை பொழுதுபோக்கு அம்சங்கள், இசையுடன் மட்டுமல்லாமல், நாவிற்கினிய சைவ, அசைவ மற்றும் மதுவுடன் கொண்டாடுவோம். கோவை நகரில் பேஷன் ஷோ உள்ளிட்ட, உயர்வும் தாழ்வும் உள்ள புதிய அனுபவத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம். என்றும் நினைவில் நிற்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஏழு சிறப்பான டி‘ஜேக்கள் பங்கேற்கின்றனர். மேடையில் கலக்க உள்ள இவர்கள் அனைவரும் பெயர் பெற்றவர்கள். நகரில் சிறந்த இசை நிகழ்ச்சியை அளித்து அசத்த உள்ளனர்.

பேஷன் ஷோ நிகழ்ச்சியில், நகரில் உள்ள 12 மாடல்கள் மற்றும் டிசைனர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...