ஈஷா - சோழா கோப்பைக்கான வாலிபால் போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணி சாம்பியன்

கோவை, டிசம்பர் 21

ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் இறுதிச்சுற்றுப் போட்டியில் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிபோட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு நடந்தது. நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு மற்றும் சோழமண்டலம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுதிர்ராவ், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் மோஹித் சவுஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.  



வாலிபால் இறுதி ஆட்டத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் மற்றும் புதுச்சேரி கலிதீர்த்தால் குப்பம் அணிகள் மோதின. இப்போட்டியை சத்குரு பலத்த கரகோஷங்களுக்கிடையே முதல்பந்தை அடித்து போட்டியைத் துவக்கி வைத்தார். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், சிறப்பாக ஆடிய  கோவை நஞ்சுண்டாபுரம் அணி 2-க்கு 1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் அணி மூன்றாவது இடத்தையும், கோபி சாவுகாட்டுப்பாளையம் அணி நான்காவது இடத்தையும் பிடித்தது.



இதைத் தொடர்ந்து, த்ரோபால் போட்டியில் கோவை பீளமேடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை கோபிமுருகன் புதூர் அணியும், மூன்றாவது இடத்தைக் கோவை சின்னியம்பாளையம் அணியும், நான்காவது இடத்தை கடலூர் திருச்சோபுரம் அணியும் பெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்குச் சத்குரு மற்றும் பிஎஸ்எஃப்-ன் டிஐஜி (பயிற்சிதுறை) திருகார்க் ஆகியோர் ஈஷா சோழா வெற்றிக் கோப்பையையும் பரிசுத்தொகையும் வழங்கினர்.  இந்தப் போட்டிகளை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் (BSF) போட்டியைக் கண்டுகளித்தனர். 

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...