அரசியல் நிலைப்பாடு குறித்து டிச.31 அறிவிப்பேன்- நடிகர் ரஜினி

டிசம்பர் 26

போரில் வெற்றிபெற பலத்தை விட வியூகம் முக்கியம் எனவும், அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று அறிவிப்பேன் என்றும் நடிகர் ரஜினி காந்த் தனது ரசிகர்களிடையே தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2-வது கட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை சமீபத்தில் அவரது தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று (டிச.26) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்கள் ரஜினியைச் சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நாளை (டிசம்பர் 27) திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்கள், 28-ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்கள், 29-ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்கள், 30, 31 தேதிகளில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் 31ம் தேதியன்று தெரிவிப்பேன் என ரசிகர்கள் மத்தியில் இன்று அவர் பேசுகையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ரசிகர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காலா படப்பிடிப்பு காரணமாக சந்திப்பு தாமதமானது. நான் நடித்த முள்ளும் மலரும் படத்தை பார்த்த பிறகு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

அரசியல் விஷயமாக என்ன சொல்லப்போகிறேன் என்பதை குறித்து தெரிந்து கொள்ள மக்களை விட ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. போர் வரும்போது பார்க்கலாம் என கூறியிருந்தேன். போர் என்றால் தேர்தலா? அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்.

போருக்குச் சென்றால் ஜெயிக்க வேண்டும். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது, வியூகம் முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதியன்று அறிவிக்க உள்ளேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...