பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் பலி


திருப்பூர், டிசம்பர் 26

திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே பழணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர்- 3 ஆண்  3 பெண் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று பாதயாத்திரையாக பக்தர்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் தாராபுரத்திற்கு முன்பாக சூர்யநல்லூரை அடுத்த புதிவிநாயகர் கோயில் அருகே பக்தர்கள் நடந்துசென்றுகொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் நடராஜன்,பரமேஸ்வரி,விஜயா, காளிமுத்து,  ராஜாமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சாந்தி என்பரை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்துபோனார். 

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி பலியான 5 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சாலைவிபத்தில் அரசு பேருந்து மோதி பக்தர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...