நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 டிசம்பர் 30 ம் தேதியன்று மிக சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் ஓவியப்போட்டி, மாவட்ட விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற கபடி, பந்து எறிதல், தடகளம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 75 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தலைமையாசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் பேரிடர் காலங்களில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு, பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், கூடலூர் கோட்டாட்சியர் முருகைய்யன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாப்ரியா, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராம்குமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...