ஆன்மீக அடியார்கள் கூட்டமைப்பின் சார்பில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆன்மீக அடியார்கள் கூட்டமைப்பினர் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் சார்பில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை, ஜனவரி 21

கோவையில் ஆன்மீக அடியார்கள் கூட்டமைப்பினர் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் சார்பில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



ஆண்டாள் குறித்து கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

பல்வேறு இந்து அமைப்புகளும் ஆண்டாள் பக்தர்களும் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆன்மீக அடியார்கள் கூட்டமைப்பினர் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் சார்பில் ஆண்டாள் குறித்து அவதூறு பேசியதாக வைரமுத்துவுக்கு எதிராகவும், ஏழுமையான் கடவுளை இழித்துப் பேசியதாக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை கண்டித்தும்  இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாத்திகர்கள் என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...