ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: நடிகர் கமல்

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 22

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சிப் பெயரை அறிவித்து, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணிமன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில், கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அதில், இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்றும், அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் கமல் பேசினார். அப்போது, எனக்கு பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் கூறினார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இங்கு சரியாக இல்லை, அதை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன் எனவும், என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...