பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயை திரும்பப் பெற்று தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை மாவட்டம் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயை திரும்பப் பெற்று தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அன்னூர் அருகேயுள்ள பச்சாபாளையம் பகுதியில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு சேமிப்பு திட்டம் மூலமாக பல ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தபால் நிலையத்தில் கணக்கு வைத்துள்ள செந்தில்குமார் என்பவர் தனது சேமிப்பு தொகையை எடுக்க முயன்ற போது, தபால் நிலையத்தில் சேமிப்பு தொகை இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் கணக்குகளை சோதித்து பார்த்த போது பெரும்பாலானோரின் கணக்கில் பணம் இல்லாது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோரின் கணக்குகளில் இருந்து ஒரு கோடி ரூபாயிக்கு மேல் கிளை தபால் நிலையம் கையாடல் செய்துள்ளதாகவும், இது குறித்து துணை தபால் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தங்கள் சொந்த செலவுகளுக்காக சிறுக சிறுக சேமித்த தொகையை கையாடல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...