தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்ட அரசு பள்ளி சமையலறை- பெற்றோர்கள் புகார்

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 22

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மேலும், மாணவர்களுக்கான சத்துணவை தயாரிக்கப் பயன்படும் சமையலறையை வெளி நபர் ஒருவர் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்.

இதனால், மாணவர்களுக்கான உணவு திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் போதுமான பாதுகாப்பின்றி மாணவர்கள் உள்ளனர். உயர்கல்விக்காக தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் ஒரே ஒரு ஆரம்பப் பள்ளியிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...